Yபருத்தி: பெருகும் சந்தை வாய்ப்பு!

Published On:

| By Balaji

பருத்தி விற்பனைக்கான எதிர்காலச் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியப் பருத்தி சங்கமும், மும்பை பங்குச் சந்தையும் இணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதற்காக இரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. பருத்திக்கான எதிர்கால ஒப்பந்தத்தை விரைவில் மும்பை பங்குச் சந்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய பருத்தி சங்கத்தின் தலைவர் அதுல் கனத்ரா *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் பேசுகையில், “பருத்திக்கான சந்தையை மேம்படுத்தத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஒட்டுமொத்த பருத்தி துறையையும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வளரச் செய்வதற்கான முயற்சிகளை இந்திய பருத்தி சங்கமும், மும்பை பங்குச் சந்தையும் இணைந்து மேற்கொள்ளும். அதற்கான ஒப்பந்தத்தில் இரு அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தமானது பருத்தித் துறையில் புதிய மைல்கல் ஆகும்” என்றார்.

இந்த ஒப்பந்தத்தில் அதுல் கனத்ராவும், மும்பை பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் ஆசிஷ் குமார் சவுகானும் கையெழுத்திட்டுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share