விஸ்வாசம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அஜித். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், தப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கே நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன் 12) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா டரியங், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், அர்ஜுன் சிதம்பரம், அஷ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் *சினிமா எக்ஸ்பிரஸ்* ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிங்க் படம் பெண்களை பற்றி பேசுவதால் அப்படத்தை ஒரு பெண் இயக்குநரை வைத்து ரீமேக் செய்யலாம் என்று அஜித்திடம் வினோத் பரிந்துரைத்தாரா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வினோத், “ஆம் நான் பரிந்துரைத்தேன். ஆனால் அது ஒரு மிகப்பெரிய தவறாக இருக்கும் என்று அஜித் கருதினார். அவரைப் பொறுத்தவரையில், இப்படத்தை ஒரு பெண் இயக்கினால் அவர் நடுநிலையின்றி படத்தை இயக்குவதாக தவறாக கருதப்படும்.
நேர்கொண்ட பார்வை படம் பெண்களுக்கானது அல்ல, ஆண்களுக்கான படம் என்று அஜித் உறுதியாக நம்பினார். இப்படத்தை ஆண்களே பார்க்க வேண்டுமென்று அவர் கருதினார். *பசங்கதான் பொண்ணுங்கள பத்தி தெரிஞ்சிக்கணும்* என்று அவர் கூறினார். அவரது தெளிவு எனக்கு வியப்பளித்தது. வர்த்தக விவகாரங்களை பற்றி கவலைப்படாமல் படத்தில் கவனம் செலுத்தும்படி போனி கபூரும் எனக்கு நம்பிக்கையளித்தார்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”