நரேஷ்
மீனவ மக்களின் உடல் வலிமையும் மன வலிமையும் மதிப்பிட முடியாதது. அவர்கள் உப்புக் காற்றில் உடலை ஊறவைத்து உரமேற்றிக்கொண்டவர்கள் . அலைக்கழிக்கும் அலைகளில் பயணித்து அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி ஒப்பற்ற வேலைகளைச் செய்பவர்கள். ஆனால், சமீப காலங்களில் அதிகமாகத் தற்கொலை செய்துகொள்பவர்களின் பட்டியலில் விவசாயிகளை அடுத்து அழுத்தமாக தங்களது எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டிருப்பவர்களாகவும் அவர்கள் மாறியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் வரைமுறையில்லாத வலிமை கொண்டவர்களை வழிநடத்தும் பாதை தெரியாததுதான். அவர்களின் ஆற்றல் டாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கப்படுகிறது; ஓடியாடி உழைக்க வேண்டிய வயதில் ஒருதலைக் காதல் வயப்பட்டு ஓரங்கட்டப்படுகிறார்கள். வருங்காலத்தின் பிரகாசத்தை உணர வேண்டிய அவர்கள் பிரச்சினைகளின் இருளில் சிக்கிக்கொண்டு ஒளி புக வழியின்றித் தொலைந்துவிடுகிறார்கள்.
சென்னை எனும் பெருநிலத்தின் முதல் குடிமக்கள் மீனவர்கள்தான். வரலாற்றின்படி சென்னை எனும் நிலம் மனிதர்களின் வசிப்பிடமாக இருந்ததில்லை. நானூறு வருடங்களுக்கு முன்புவரை அது நாடோடிகளின் நிலமாகத்தான் இருந்தது. ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்குப் பிறகு 1636ஆம் ஆண்டு வாக்கில் வணிகம் செய்வதற்காக வரவழைக்கப்பட்ட மனிதர்கள்தான் இந்நவீன நகரின் பூர்வகுடிகள். கடலோடிகளாகக் கரை சேர்ந்தவர்கள் பலர் சேர்ந்து கட்டமைத்த நகரம்தான் நவீன சென்னை. ஆனால், இன்று அதே நவீனத்தின் எச்சமாக, இப்பெருநகரின் ஒரு மூலையில் கடற்கரை ஓரத்தில் படுக்கவைக்கப்பட்ட கரையான் புற்றுகள் போல பரவிக் கிடந்து பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.
நொச்சிக்குப்பத்தில் தொடங்கும் கவனிக்கப்படாத அப்பகுதியின் வழியாக மிகக் கவனமாகச் செல்ல வேண்டும். அவ்வளவு நெரிசலாக அமைப்பட்ட குடியிருப்புகளில், அவர்கள் விசாலமான மனதுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மெரினாவிலிருந்து வீடு திரும்பும் வழியில் இக்குடியிருப்புகளின் வாசலில் வைத்து விற்கப்படும் மீன்களை வாங்கிவரச் சென்றபோது, மீன் வலையை மடித்துவைத்துவிட்டு கிரிக்கெட் விளையாடக் கிளம்பினார் ஓர் இளைஞர். சாதாரணமாக விளையாடச் செல்வதுபோல இருந்தாலும், புதுப்பொலிவுடன் கிளம்பியவரைப் பார்க்கவே புத்துணர்ச்சியாக இருந்தது. எதிரே வந்தவரிடம் தனது உடையைக் காட்டி ஏதோ கூறினார். நெருங்கிச் சென்று கவனித்தபோது, தனது புதிய ஜெர்சியைக் காட்டி, கிரிக்கெட் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு அருகே இருந்த படகுக்குள்ளிருந்து கிரிக்கெட் கிட் ஒன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தார். வேறு இடத்தில் நடக்கும் போட்டி என்பதால் அந்த இடத்துக்காரர்கள் ஏமாற்றிவிடுவார்கள் என்று எதிரே வந்தவர் சொன்னபோது, ‘இது அப்டி இல்லணா. நல்லா நியாமாத்தான் நடத்துறாங்க. ஒரு வாட்டிகூட யாருக்கும் சண்டையே வரல.” என்றவர், ’கப்பு நம்ம ஏரியாக்குத்தான்ணா’ என்றபடி தனது வாகனத்தில் ’கிட்’ உடன் ஏறி அமர்ந்தார்.
இவ்வளவு நியாயமாக யார் அந்த போட்டியை நடத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது.
வாகனத்தில் ஏறியவர், என்னைக் கடந்து சென்றபோது அவரின் ஜெர்சியில் ஒரு பெயர் எழுதியிருந்தது.
‘வருண் அறக்கட்டளை!’.
(மாற்றத்தைப் பின்தொடர்வோம்…)
**-விளம்பர தலையங்கம்**
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)
**
**
[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)
**
�,”