Yதென்மேற்குப் பருவமழை தொடங்கியது

public

இந்த ஆண்டு, தென்மேற்குப் பருவமழை ஜுன் 9ம் தேதியான நாளைதான் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கேரளாவில் நேற்று இரவு முதலே தொடர்மழை பெய்துவருகிறது. இதற்கிடையில், தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக வெப்பச்சலனம் காரணமகாவும் தென்மேற்கு பருவமழையின் தொடக்கமாகவும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது.

சென்னையில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்தது. தொடர்ந்து, இன்று பிற்பகலில் இருந்து பலத்தமழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அடையாறு, அண்ணாசாலை, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெரினா கடற்கரையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதற்கிடையே, தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டிலும் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதன்காரணமாக, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்யும். அதிகபட்சமாக, பேச்சிப்பாறையில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், தமிழகத்தின் மற்ற இடங்களிலும் மழைபெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *