yதமனுக்குக் கிடைத்த மிகப்பெரிய திருப்புமுனை!

Published On:

| By Balaji

‘ஈரம்’, ‘காஞ்சனா’, ‘ஒஸ்தி’, ‘மெளனகுரு’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். தமிழ் திரைப்படங்களைப் போல தெலுங்கிலும் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் – தெலுங்கு இரண்டிலும் பணியாற்றி வந்தாலும், இந்தியில் அறிமுகமாகமல் இருந்த தமன் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் ‘கோல்மால் 4’ மூலமாக இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.

அஜய் தேவ்கான், பிரனிதா சோப்ரா, தபு, நெய்ல் நிதின் முகேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கோல்மால் 4’ படத்தின் படப்பிடிப்பு முமையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜய் தேவ்கான் மற்றும் ரோஹித் ஷெட்டி இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. ‘கோல்மால் 4’ படத்துக்கு இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ள தமன், விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel