yஜி.எஸ்.டி: பணவீக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள்!

public

ஜி.எஸ்.டி-யும், ஏழாம் ஊதிய கமிஷனும் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என எச்.எஸ்.பி.சி. வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

ஜி.எஸ்.டி-யும், ஏழாம் ஊதிய கமிஷன் வழங்கும் வீட்டு வாடகை சலுகையும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக பணவீக்கம் உயரலாம் என எச்.எஸ்.பி.சி. வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

வீட்டு வாடகை சலுகை அமலுக்கு வந்தவுடன், மொத்த பணவீக்கம் 65 புள்ளிகள் உயரும் என எச்.எஸ்.பி.சி. அறிக்கை கூறுகிறது. மேலும் மாநில அரசுகளும் தன் ஊழியர்களுக்கு வீட்டு வாடகை சலுகை வழங்கினால், பணவீக்கம் மேலும் 65 புள்ளிகள் உயரும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வீட்டு வாடகை சலுகையை அமல்படுத்திய பின், இரண்டு ஆண்டுகளுக்கு மாநில அரசுகள் வீட்டு வாடகை சலுகையை மெதுவாக அமல்படுத்தினால், பணவீக்கம் முதலில் அதிகரித்து, பின்னர் குறையும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், காலப்போக்கில் பணவீக்கம் 10இல் இருந்து 50 புள்ளிகள் வரை ஜி.எஸ்.டி-யால் குறையும் எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1 சதவிகிதம் சலுகைகளுக்காக செலவிடப்படும். இது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாகும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இந்த வித்தியாசத்தை அரசு சமாளித்துக்கொள்ளும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *