இந்திய மாநிலங்களிலேயே சொத்துப் பதிவுக்கான செலவுகள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் சொத்துப் பதிவுக்கான கட்டணம் 16 சதவிகிதமாக இருப்பதால் சொத்துப் பதிவுக்கு அதிகக் கட்டணம் விதிக்கும் மாநிலமாகப் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் ஸ்டாம்ப் வரி 7 சதவிகிதமாகவும், பதிவுக் கட்டணம் 4 சதவிகிதமாகவும் இருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து கேரளா மற்றும் புதுச்சேரியில் சொத்துப் பதிவுக் கட்டணங்கள் 10 சதவிகிதமாக இருக்கின்றன. சில மாநிலங்கள் முதலீடுகளை அதிகமாக ஈர்க்கவும், நிர்வாகச் சீர்திருத்தங்களை மேம்படுத்தவும் தங்களது சொத்துப் பதிவுக் கட்டணங்களைக் குறைத்துள்ளன. உதாரணமாக, அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், ஒடிசாவில் சொத்துப் பதிவுக் கட்டணம் 5 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் 5.6 சதவிகித ஸ்டாம்ப் வரியும், 1 சதவிகித பதிவுக் கட்டணமும் விதிக்கப்படுகிறது. தெலங்கானாவில் 6 சதவிகிதமாகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 7.5 சதவிகிதமாகவும் சொத்துப் பதிவுக் கட்டணம் உள்ளது. சில மாநிலங்கள், ஒன்றிய பிரதேசங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறாகப் பதிவுக் கட்டணம் உள்ளது. அஸ்ஸாமில் பெண்களுக்கு 4 சதவிகித ஸ்டாம்ப் வரியும், 1 சதவிகித பதிவுக் கட்டணமும் விதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு 5 சதவிகித ஸ்டாம்ப் வரியும், 2 சதவிகித பதிவுக் கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் சொத்துப் பதிவுக் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும், 2018-19 நிதியாண்டில் சொத்துப் பதிவு வாயிலாகக் கிடைக்கும் வருவாய் 21 சதவிகிதமும், சொத்துப் பதிவு செய்த ஆவணங்களின் எண்ணிக்கை 16 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் டாஸ்மாக்கைத் தொடர்ந்து அதிக வருவாய் தரும் மூலமாகச் சொத்துப் பதிவு உள்ளது. எனவே சொத்துப் பதிவுக் கட்டணம் மற்றும் ஸ்டாம்ப் வரியைக் குறைக்கத் தமிழக அரசு முயற்சிக்காது என்று கருதப்படுகிறது. இத்துறையை வருவாய் தரும் துறையாக மட்டுமே அரசு பார்ப்பதாகவும், கட்டணங்களைக் குறைத்தால் அதிக பரிவர்த்தனைகள் நடக்கும் எனவும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”