கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் 490 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் பாலியல் தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசின் சமீபத்திய [அறிக்கை கூறியது](https://minnambalam.com/k/2019/07/19/5). இந்நிலையில் சென்னையில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்ஸோ சட்டம் 2012-இன் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 490 பாலியல் தொடர்பான வழக்குகள் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்தாலும், மக்களுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருப்பதாகவும், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் புகாரளிக்கத் துணிந்து முன்வருவதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
சென்னை மாநகர காவல் துறையிடமிருந்து கிடைத்த தகவலின்படி, 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 131 பாலியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 98 பாலியல் வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள 131 பாலியல் வழக்குகளில் 89 வழக்குகள் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளாகும். 2017ஆம் ஆண்டில் 84 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2018ஆம் ஆண்டில் 145 பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. காவல் துறையால் பதிவுசெய்யப்படும் இந்த பாலியல் பலாத்கார வழக்குகள் பெரும்பாலும் காதல் தொடர்பான வழக்குகள் எனவும், அதில் சம்பந்தப்படும் பெண்களின் வயது 15 முதல் 18 வரையிலும், ஆண்களின் வயது 19 முதல் 23 வரையிலும் இருப்பதாகவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”