Yசூரியை ஹீரோவாக்கும் வெற்றிமாறன்

Published On:

| By Balaji

திரையுலகில் சம்பந்தமில்லாத இரு பிரபலங்கள் இணையும்போது உருவாகும் எதிர்பார்ப்பு அதிகமிருக்கும். அப்படியான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல்.

தமிழ் சினிமாவில் தான் தேர்ந்தெடுக்கும் களம், பட உருவாக்கம் ஆகியவற்றில் தனித்துத் தெரிபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் உள்ளடக்கம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதன் உருவாக்கம் பரவலாகப் பேசப்பட்டது. தற்போது அவர் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தை இயக்கிவருகிறார். வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

சீரியஸான படங்களையே இயக்கிவரும் வெற்றிமாறன் அடுத்ததாக நகைச்சுவை நடிகர் சூரியுடன் இணையவுள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் சூரி கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். அசுரன் படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இதில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை எல்ரெடு குமார் தனது ஆர்.எஸ்.இன்ஃபொடெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். முன்னதாக இந்த நிறுவனம் கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், விண்ணைத்தாண்டி வருவாயா, யாமிருக்க பயமேன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

வெற்றிமாறன் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளிலும் ஈடுபடவுள்ளார். மேலும், அந்தப் படத்தில் அமீர் கதாபாத்திரத்தின் முன்கதையை ராஜன் வகையறா என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[சசிகலாவின் அருமை இப்போது புரிகிறதா? -அமமுகவின் வீடியோ](https://minnambalam.com/k/2019/07/24/49)**

**[ரூ.200 கோடி சொத்து: முன்னாள் மேயர் கொலைப் பின்னணி!](https://minnambalam.com/k/2019/07/24/68)**

**[மா.சுப்பிரமணியனுக்கு அரசு வீசும் வலை!](https://minnambalam.com/k/2019/07/24/43)**

**[ டிஜிட்டல் திண்ணை: விஸ்வரூப வேலுமணி- அலர்ட் ஆகும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/24/77)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment