கொல்கத்தாவில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலின் போது மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. மக்களவை தேர்தல் நிலவரங்கள் ஒரு பக்கம் அனைவரது கவனத்தை ஈர்த்தாலும், மறுபக்கம் பாஜக, திருணமூல் காங்கிரஸ் இடையே நடைபெற்ற மோதல்கள் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. வன்முறைச் சம்பவங்களுக்கு இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்த நிலையில், மே 19ஆம் தேதி நடைபெற்ற இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது அம்மாநிலத்தில் வன்முறைகள் வெடித்தன. ராகுல் சின்ஹா, நிலஞ்சன் ராய், அனுபம் ஹஸ்ரா உள்ளிட்ட பாஜக வேட்பாளர்களின் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் வன்முறை நடந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் நாளை (மே 22) மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 200ஆம் எண் வாக்குச்சாவடியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் அதற்குப் பதிலாக நாளை மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் ராகுல் சின்ஹா, திருணமூல் காங்கிரஸ் சார்பில் சுதிப் பாண்டியோபாத்யா, சிபிஐ(எம்) சார்பில் கன்னிகோ போஸ் கோஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 123ஆவது வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு மே 22ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
**
[சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)
**
.
.
�,”