Yகேரள கழிவுகள்: 27 லாரிகள் பறிமுதல்!

Published On:

| By Balaji

கேரளாவிலிருந்து கழிவுகளை ஏற்றிவந்த 27 லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர் தமிழக அதிகாரிகள்.

கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவுகள் கொண்டுவந்து, தமிழகத்தில் சட்டவிரோதமாகக் கொட்டப்படுகிறது. இந்த சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், காவல் துறையினரின் கண்காணிப்புகளையும் மீறி மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டச் சாலையோரங்களில் கொட்டப்படுவது தொடர்கிறது.

நேற்று (நவம்பர் 21) கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றிக்கொண்டு, நெல்லை மாவட்டம் புளியரை வழியாக 27 லாரிகள் வந்துள்ளன. இந்த லாரிகளை புளியரையில் தடுத்த நிறுத்திய போலீசார், அவற்றைப் பறிமுதல் செய்து சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தனர். லாரியில் ஏற்றிவந்த கழிவுகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில் பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிகள் புளியரையில் நிறுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றி வந்த 23 லாரிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்த 4 லாரிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share