Yகேரளா, வளைகுடா நாடுகளில் ரம்ஜான்!

public

ரம்ஜான் பிறை தெரிந்ததால், கேரளா மற்றும் வளைகுடா நாடுகளில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. பிறை தெரியாததால், கேரளா தவிர இந்தியா முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகைக்கு முன்னர் இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கப்படும். 30 நாட்கள் நோன்புக்கு பின்னர் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்நிலையில், யுஏஇ, சவூதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் இன்று (ஜூன் 15) ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இன்று அதிகாலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர். சிறுவர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

அது போன்று, கேரளாவில் கோழிக்கோட்டில் பிறை தெரிந்ததால், இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. பிறை தெரிந்த அன்று இஸ்லாமிய மக்கள் தங்கள் நோன்பை முடித்துக்கொள்வார்கள். இந்தப் பண்டிகை சகோதரத்துவத்தையும் அமைதியையும் வலியுறுத்துகிறது.

இந்தியாவில் தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பிறை தெரியவில்லை. அதனால் நாளை(ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படுகிற நிலையில், இன்று காயல்பட்டினம், நாகூர், மற்றும் நாகை மாவட்டங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *