நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுப்பித்துக்கொள்ளவும், புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டவையே பண்டிகைகள் என்கின்றனர் முன்னோர்கள். இந்த நவராத்திரி திருநாளில் முக்கிய இடம்பிடிக்கும் சுண்டல் வகைகளில் முதலிடம் பிடிக்கும் இந்த மாங்காய் – பட்டாணி சுண்டல், அனைவரால் ருசிக்கப்படும் சுண்டலாகும்.
**என்ன தேவை?**
வேகவைத்த பட்டாணி – 3 கப்
மாங்காய்த் துருவல் – அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
வெங்காயம் – அரை கப்
சர்க்கரை – ஒரு சிட்டிகை
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 4
கேரட் துருவல் – அரை கப்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கடுகு, எண்ணெய் – தாளிக்க
கொத்தமல்லி – அரை கப்
**எப்படிச் செய்வது?**
இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கி அத்துடன் வேக வைத்த பட்டாணியை வடிகட்டி சேர்க்கவும். அடுப்பை நிறுத்தி தேங்காய், மாங்காய்த் துருவல்கள், சாட் மசாலாத் தூள் சேர்த்து பிரட்டவும். சுவையான சுண்டல் தயார்.
**சிறப்பு**
எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச்சத்து மிகுந்தது பச்சைப் பட்டாணி. அனைவருக்கும் ஏற்றது.
[நேற்றைய ரெசிப்பி: சுகியன்](https://minnambalam.com/k/2019/10/03/15)�,