Yகிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் வித் ஹனி

Published On:

| By Balaji

ஊரடங்கு நாட்கள் தொடர்ந்தாலும் பொதுவாக இப்போது எல்லோர் வீட்டிலும் ஓட்ஸ் இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. பெரியவர்கள் மட்டுமல்லாது நார்ச்சத்து மிகுந்த ஓட்ஸை எந்த வயதினரும் சாப்பிடலாம். கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து நிறைந்த ஓட்ஸ் சருமப் பளபளப்புக்கு நல்லது. இனிப்புக்குச் சர்க்கரை சேர்க்காமல் தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் சருமப் பளபளப்புடன் ஆரோக்கியமும் உங்கள் வசமாகும்.

**என்ன தேவை?**

ஓட்ஸ் – 50 கிராம்

பால் – 50 மில்லி

தண்ணீர் – 50 மில்லி

தேன் – 10 மில்லி

பாதாம்பருப்பு – சிறிதளவு

**எப்படிச் செய்வது?**

ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு ஓட்ஸ் மற்றும் சிறிது தேனைப் பாலுடன் சேர்த்து, குறைந்த அளவு தீயில் கொதிக்கவிட வேண்டும். இப்படிச் செய்வதால் ஓட்ஸ் நன்கு வெந்து 10 நிமிடங்களில் நன்றாகக் கெட்டியாகிவிடும். பின்னர் பாத்திரத்தைக் கீழே இறக்கி, வெந்த ஓட்ஸ் கலவையின் மேலே பாதாம் மற்றும் சிறிது தேன் சேர்த்துப் பரிமாறலாம்.

[நேற்றைய ஸ்பெஷல்: லாக் டவுன் நாட்கள் – எடையைக் கூட்டும் உணவு தேடல்](https://minnambalam.com/k/2020/05/03/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share