பயிர் காப்பீடு உரிமம் கோரியவர்களுக்கு உரிய காலத்தில் பணம் வழங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க, வேளாண் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஒன்றிய வேளாண் அமைச்சரான ராதா மோகன் சிங் இதுகுறித்து செப்டம்பர் 2ஆம் தேதி *பிசினஸ் லைன்* ஊடகத்திடம் பேசுகையில், “பயிர் மதிப்பீடுகளின் அடிப்படையில் மகசூல் தரவுகளை விரைவாகச் சேகரிக்க காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகையை வழங்காமல் தாமதப்படுத்தும் நிறுவனங்களுக்கு 12 விழுக்காடு அபராதம் விதிக்கவும் நிதியமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.
விவசாயிகளுக்கான *பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா* என்ற பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மாதம் மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி 2017ஆம் ஆண்டு காரிஃப் பருவத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.16,448 கோடி உரிமம் கோரப்பட்டுள்ளது. அதில் ரூ.13,768 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ரூ.11,899 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.�,