yகல்விக்கொள்கை: விடாமல் வலியுறுத்தும் சூர்யா

Published On:

| By Balaji

அகரம் பவுண்டேஷன் மூலம் கல்விப் பணியாற்றிவரும் நடிகர் சூர்யா தேசிய கல்விக்கொள்கை குறித்து தமிழகத்தில் விவாதத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த வாரம் சாலிகிராமத்தில் நடைபெற்ற சிவக்குமார் அறக்கட்டளை விழாவில் தேசிய கல்விக்கொள்கையில் உள்ள அபாயங்கள் குறித்துப் பேசினார். அதற்கு முன்பாகவே பெற்றோர்கள், மாணவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுக்க பல்வேறு மட்டங்களில் இருந்தும் ஆதரவு வர பாஜகவும், அதிமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன.

தற்போது இந்த எதிர்வினைகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானது, கல்விக்கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதே. இதற்கு பதிலளிக்கும் விதமாக அகரம் பவுண்டேஷன் மூலம் பயனடைந்த மாணவர்கள், சாதித்த துறைகள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளார்.

அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதைவிட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.

“அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். அவர்களில் 1,169 பேர் பொறியாளர்கள், 1,234 பேர் கலை அறிவியல் பட்டதாரிகள், 54 பேர் மருத்துவர்கள், 285 பேர் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும், 167 டிப்ளமோ படிப்புகளுக்கும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். இப்படி படித்தவர்களில் 90% பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்” என்று கூறியுள்ள சூர்யா நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின்னர் தங்களால் ஒரு அரசுப் பள்ளி மாணவரைக்கூட மருத்துவ படிப்புக்கு சேர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

“புதிய கல்விக் கொள்கையில் எல்லாவிதமான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும். இத்தகைய மாணவர்களின் எதிர்கால நலனைத் தீர்மானிக்கிற தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது நாம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணிக் கவலையாக இருந்தது. இம்மாணவர்களை மனதில் நிறுத்தி, இந்தக் கல்விக் கொள்கையை அணுக வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ள சூர்யா இந்த வரைவு அறிக்கை மீதான ஆக்கப்பூர்வமான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் [இணையத்தில்](https://innovate.mygov.in/new-education-policy-2019/ ) தெரிவிக்கவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[BIG BOSS 3: ஸ்மோக்கிங் ரூம் பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/38)**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share