yகருணாநிதியின் நினைவாற்றல் மெச்சும் மகளிரணி!

public

மகளிர் அணி நடத்தும் திமுக தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்த நாள் விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுக்க மகளிர் அணிச் செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி தலைமையில் கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரச்சாரக் குழு நிர்வாகிகள் கருணாநிதியை அவரின் இல்லத்தில் சந்தித்தனர்.

வெகு இயல்பாக அவர்களை வரவேற்றவர் , ‘எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமா இருக்கீங்களா?’ என்றார் கருணாநிதி. ‘நலமோடு உள்ளோம்’ என்ற மகளிர் அணியினர், அதன்பின் விழா அழைப்பிதழை வழங்கினர். அப்போது விஜயா தாயன்பன், ‘உங்களுடைய பாடல்களைதான் நான் பாடப்போறேன். பயிற்சி எடுத்துகொண்டு உள்ளேன்’ என்று சொன்னபோது ‘முன்பு சந்தித்தபோதும் இதேதானம்மா சொன்னாய்’ என்றார் கருணாநிதி சிரித்தபடி.

இதையொட்டி நம்மிடம் பேசிய ஆர்.கே.நகரில் போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், ‘நான் தேர்தல் பிரச்சார காலகட்டத்தில் கலைஞரை நேரில் சந்தித்தேன். அப்போது ‘என்னம்மா தொகுதி எப்படி இருக்கு?’ன்னு கேட்டார். ‘நல்லா இருக்கு. நிச்சயம் ஜெயிப்போம்’ன்னு சொன்னேன். அதன்பின் முடிவுகள் வந்து வெற்றி வாய்ப்பு இழந்துவிட்டது அனைவரும் அறிந்ததே. திருவாரூரில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து சொல்வதற்காக நேரில் மீண்டும் சென்று கலைஞரை சந்தித்தேன். ‘என்னம்மா அன்னிக்கு ஜெயிச்சுடுவோம்ன்னு அவ்வளவு உறுதியா சொன்ன. ஆனா தோற்றுவிட்டோமே’ என சிரித்தபடியே கேட்டார். இளமையா இருப்பவங்களே ஞாபக மறதியா இருக்கும்போது கலைஞரின் நினைவாற்றல் பிரமிப்பா இருக்கு. நினைவாற்றலோடு இருக்கவேண்டும் என்பதை தனது நினைவாற்றல் மூலம் உணர்த்தியதுதான் அவரிடமிருந்து நாங்கள் பெற்ற பிறந்தநாள் பரிசாக எடுத்துக்கொள்கிறோம்’ என்றார் அழுத்தமாக. அதன்பின் பேராசிரியர் க.அன்பழகனைச் சந்தித்தனர் அவர்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *