Yகமல் சொன்னதை ஏற்கும் காலம் வரும்!

Published On:

| By Balaji

கமல் சொன்னதை ஏற்கும் காலம் வரும் என்று ’ஒத்த செருப்பு’ பட இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியுள்ளார்.

’ஒத்த செருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே 19) நடைபெற்றது. பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் இந்தப் படத்தின் விழாவில், கே.பாக்யராஜ், கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பார்த்திபன் பேசும் போது, “இயக்குநர் ஷங்கர் சாருக்கு 25ஆம் ஆண்டையொட்டி, மிஷ்கின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், நான் பேசுவேன் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் மிகச்சிறிய அறையில், மணிரத்னம் சார், கெளதம் வாசுதேவ்மேனன் முதலானோர் உட்பட பல இயக்குநர்கள் அங்கே இருந்தார்கள். மணிரத்னம் சார், அடிக்கடி மைக்கை வாங்கிக்கொண்டு மனதில் இருப்பதைப் பேசினார். அது ஷங்கர் படத்தை விட பிரமாண்டமான தருணம். அவரின் படங்களாலும் நட்பாலும் நிகழ்ந்தது என்றே சொல்லவேண்டும்.

எங்கள் டைரக்டர் பாக்யராஜ் சார் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. இப்படியொரு மேடையில் நான் நிற்பதற்கு அவர்தான் காரணம்.

விஜய், அஜித், கமல் சார் படங்களெல்லாம் தனியாகவே பேசப்படும். ஆனால், நான் கஷ்டப்பட்டு ஏதேனும் செய்தால்தான் அந்த கேமிற்குள்ளேயே செல்லமுடியும். கடந்த 15 வருடங்களாக, இந்த திரைக்கதை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. களம் மட்டும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்தது. இப்போது அது படமாகியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், ரசூல் பூக்குட்டி என இந்தப் படத்தின் எல்லாக் கலைஞர்களுக்கும் நன்றி.

நான் கமல் சாரின் மிகப்பெரிய விசிறி. தேர்தலின் போது ஓட்டுப் போட்டுவிட்டு வந்த போது, ‘கமல் சாருக்குத்தானே ஓட்டுப் போட்டீங்க’ என்று பலரும் கேட்டார்கள்.

இப்போது சரித்திரத்தைப் பற்றிச் சொன்னாலும் சரி, பூகோளத்தைப் பற்றிச் சொன்னாலும் சரி… யாரும் நம்ப மறுக்கிறார்கள். பூமி உருண்டை என்பதையே பின்னாளில்தான் ஏற்றுக்கொண்டார்கள். அதேபோல் கமல் சார் சொன்னது உண்மை என்பதை பிறகு ஒருநாளில் புரிந்துகொள்வார்கள். அவர் கையில் செங்கோல் வழங்கும் காலம் வரும்.

கமல் சாருக்கு, நடிப்புதான் உலகம். சினிமாதான் ஆசை. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று வந்திருக்கிறார். தியாகம் செய்வதற்கு இப்போது யாரும் தயாராக இல்லை. ஆனால், தன்னுடைய எல்லா சுகங்களையும் விட்டுவிட்டு, மக்களுக்காக களமிறங்கியிருக்கும் கமல் சாரை நாம் எல்லோரும் ஆதரிக்கவேண்டும்.

40 வருடங்களுக்கு முன்பே கமல் சார், இப்படியொரு கதையைச் சொல்லியிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். பல தயாரிப்பாளர்களிடம் சென்று கதை சொன்னார். யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகுதான் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்று சொந்தக் கம்பெனி ஆரம்பித்து, தான் விருப்பப்பட்ட சினிமாக்களை எடுத்தார். நல்லவேளையாக, இந்த விஷயத்தை, எனக்காகவே விட்டுவைத்தார் என்றுதான் சொல்லவேண்டும்” என்று பார்த்திபன் பேசினார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

**

[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/50)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share