ஆற்காடு அருகே கணவரையும் குழந்தையையும் கொன்று புதைத்த பெண்ணைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தாஜ்புர மந்தைவெளிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் எலக்ட்ரீசியனாக இருந்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இவர் தீபிகா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தம்பதியருக்கு பிரனீஷ் என்ற ஒரு வயது குழந்தை உண்டு.
கடந்த 13ஆம் தேதியன்று கணவர் மற்றும் குழந்தை பிரனீஷை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தார் தீபிகா. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வந்தனர். ராஜாவின் செல்போனை வைத்து விசாரணையைத் தொடர முயன்றபோது, அது தீபிகாவிடம் இருப்பது தெரிய வந்தது. இது பற்றிக் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார் தீபிகா. அதே நேரத்தில், தனது கணவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதாகச் சில உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராஜாவையும் பிரனீஷையும் கொலை செய்து வீட்டின் அருகேயுள்ள ஏரிக்கரையில் புதைத்ததாகத் தெரிவித்துள்ளார் தீபிகா. நேற்று (மே 17) அந்த இடத்தில் துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். தீபிகா குறிப்பிட்ட இடத்தில் இருந்து துர்நாற்றம் வந்ததையடுத்து, அந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சடலங்களை வெளியே எடுத்து ஆய்வு செய்யும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
காதல் திருமணம் செய்தாலும் தினமும் மது அருந்திவிட்டு வந்து ராஜா தகராறு செய்ததாகவும், அதனால் அவரையும் குழந்தையையும் கொலை செய்ததாகவும், விசாரணையின்போது தீபிகா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலையில் தீபிகா தவிர வேறு நபர்களுக்குத் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ரவீந்திரநாத் எம்பி: கல்வெட்டில் பெயர் மறைப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/56)
**
.
.
�,”