பெரம்பலூரில் சினிமா பாணியில் கஞ்சா கடத்தல் கும்பலை மங்களமேடு போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து மதுரைக்குக் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்ய முயன்ற போது அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அக்காரை துரத்திச் சென்றுள்ளனர். போலீசார் பின்தொடருவதைக் கண்ட கார் ஓட்டுநர் மேலும் வேகத்தை கூட்டியுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சினிமா பாணியில் அந்த காரின் டயரை போலீசார் சுட்டுள்ளனர்.
இதனால் நிலை தடுமாறிய கார் சிறிது தொலைவில் சென்று நின்றது. பின்னர் அந்த காரில் போலீசார் சோதனை நடத்தியதில் அதில் கஞ்சா பொட்டலங்களும், துப்பாக்கிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 180 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளன.
அதனை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் அவர்கள், மதுரையைச் சேர்ந்த படைமுனியசாமி, வழிவிடுமுருகன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர்ந்து கஞ்சா கடத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும், மதுரை காவல் நிலையத்தில் பல புகார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. பிடிபட்டவர்களை மங்களமேடு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
**
மேலும் படிக்க
**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**
�,”