இயக்குநர் ஏ.எல்.விஜய், மருத்துவர் ஐஸ்வர்யா திருமணம் நேற்று (ஜூலை 11) நடைபெற்றது.
மதராசபட்டினம், தலைவா, தாண்டவம், சைவம், தேவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் 2014ஆம் ஆண்டு நடிகை அமலா பாலைத் திருமணம் செய்துகொண்டார். தலைவா படத்தின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால், இந்தக் காதல் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ஏ.எல்.விஜய், மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகக் கடந்த மாதம் அறிவித்தார். “உங்கள் முழு அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்” என்று ஏ.எல்.விஜய் அப்போது தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் பாபு – அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா – இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”