சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் புரொமோஷனில் டிவிட்டர் நிறுவனம் பங்களித்துள்ளது.
திரைப்படங்களை உருவாக்குவதற்காக பட்ஜெட் ஒதுக்குவது போலே படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் தயாரிப்பு தரப்பு பெரியளவில் பட்ஜெட் ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னணி நாயகர்கள், இயக்குநர்கள் பணியாற்றியுள்ள படங்கள் என்றாலும் படத்திற்கான புரொமோஷன்களே திரையரங்குகளை நோக்கி பார்வையாளர்களை அழைத்துவரும்.
தொலைக்காட்சி விளம்பரங்களைப் போல சமூகவலைதளங்கள் மூலம் ரசிகர்களைச் சென்றடைவதை பட நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றன. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனமே என்ஜிகே திரைப்படத்திற்கான புதிய எமோஜியை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக விஜய் நடித்த மெர்சல், ரஜினிகாந்த் நடித்த காலா உள்ளிட்டப் படங்களுக்கு டிவிட்டர் நிறுவனம் எமோஜி வெளியிட்டிருந்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் தங்கள் பதிவுகளில் எமோஜியை அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.
�,”