yஊட்டச்சத்து குறைபாட்டை குறைத்த இந்தியா: ஐநா!

Published On:

| By Balaji

இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை குறித்து ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு, சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம், யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன. 2018ஆம் ஆண்டில் உலகளவில் 82 கோடி பேருக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 2004-06ஆம் ஆண்டில் 25.39 கோடியிலிருந்து 2016-18ஆம் ஆண்டில் 19.44 கோடியாகக் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. எனினும், வயது வந்தவர்களில் (18 வயதுக்கு மேற்பட்டோர்) உடல் பருமனானவர்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 2.41 கோடியிலிருந்து 2016ஆம் ஆண்டில் 3.28 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 29 லட்சம் என இந்த அறிக்கை கூறுகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடுகளிலும், குறிப்பாக நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும், சர்வதேச சரக்கு வர்த்தகத்தை மட்டும் நம்பியுள்ள நாடுகளிலும் பசி அதிகரித்துக்கொண்டே போவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

பசி அதிகரிக்கும் நாடுகளில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிப்பதாக ஐநா அறிக்கை கூறுகிறது. இதனால், ஏழைகளும், விளிம்புநிலை மக்களும் பொருளாதார பின்னடைவுகளையும், வீழ்ச்சிகளையும் சந்திப்பது கடினமாகியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. “மக்களையும், சமுதாயங்களையும் மையமாக வைத்து அனைவருக்குமான மாற்றத்தில் கவனம் செலுத்தினால் பசி, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சினைகளை குறைக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா, எல் சல்வடோர், கானா, துனிசியா, உகாண்டா ஆகிய நாடுகளில் வறுமை விகிதம் ஆண்டுக்கு 3 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை சரிந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் இமாலய மலைப் பகுதிகளில் பொருளாதார பின்னடைவாலும், இயற்கை வள சீரழிவாலும் உணவு உற்பத்தியும், வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share