ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள நிலையில், நேற்று (ஜூலை 11) இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே பிஞ்ச் வெளியேற டேவிட் வார்னரும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்ஹோம்ப் 4 ரன்னில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஸ்டீவன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்த நிலையில், அலெக்ஸ் கேரி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஸ்மித் மட்டும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். 48ஆவது ஓவரில் 85 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரசித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
சொந்த மண்ணில் பலமான பேட்டிங் வரிசையுடன் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு இந்த இலக்கு மிகவும் எளிதானது என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. ஜானி பேர்ஸ்டோவ் 34 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 65 பந்துகளில் 85 ரன்கள் குவித்து வெளியேறினர். ஜோ ரூட் (49 ரன்), ஆயின் மோர்கன் (45 ரன்) வெற்றி இலக்கை எளிதாக எட்டினர். இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களிலேயே 226 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. தொடக்க ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்த கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதோடு, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. கடைசியாக நடந்த ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் நான்கு முறை ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 1996 உலகக் கோப்பையிலும் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது. ஜூலை 14ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் சாம்பியன் பட்டத்துக்காகப் பலப்பரீட்சை நடத்துகின்றன.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!](https://minnambalam.com/k/2019/07/11/76)**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”