இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள `லக்ஷ்மி’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ யூட்யூபில் வெளியாகி கவனம்பெற்று வருகிறது.
பிரபு தேவா ஏ.எல்.விஜய் கூட்டணியில் முதன் முறையாக இந்தி மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் தேவி. இந்தப் படம் இந்தி ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து இந்தக் கூட்டணி நடனத்தை மையமாகக் கொண்டு மீண்டும் இணைந்த திரைப்படம்தான் லக்ஷ்மி.
இந்தப் படத்தில் சுட்டித்தனமான கதாபாத்திரத்தில் தித்யா பண்டே என்ற சிறுமி நடித்துள்ளார். ஏற்கனவே வெளியாகிய இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகளில் தித்யாவின் நடன அசைவுகள் மனதைக் கொள்ளையடித்தன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். அதில் தித்யா, ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருடன் செய்த குறும்புத் தனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.
முன்னதாக கடந்த 18ஆம் தேதி இத்திரைப்படத்தின் [அசையும் யாவும்](https://www.youtube.com/watch?v=QPKP4Z1WxYk) என்ற ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியிருந்தது. 2.51 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் பிரபுதேவாவுடன் இணைந்து 10க்கும் மேற்பட்ட குழந்தைகள், வெறும் வசனங்களை மட்டும் கொண்டு நடனமாடியிருக்கின்றனர். இந்த வீடியோவை இதுவரை 1.98 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
[லக்ஷ்மி படத்தின் மேக்கிங் வீடியோ](https://www.youtube.com/watch?v=byqcMgV-Mtw)�,”