அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படம் குறித்த முக்கிய தகவல்களை இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.
ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் ஏற்கெனவே வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்துள்ளதே சர்ச்சைக்கான காரணமாக இருந்தது. இதனாலே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்துவந்த படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
பிரதீப்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தில் 83 வயதான பழம்பெரும் பாடகி சுசீலா ஒரு பாடல் பாடியுள்ளார். 70 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு படத்தில் அவர் பாடிய பக்தி பாடலை தற்போது ஆடை படத்திற்காக பாடியுள்ளார். பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட படங்களை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த தகவலையும் ரத்னகுமார் பகிர்ந்துள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமலாபாலுடன் இணைந்து, ரம்யா சுப்பிரமணியன், ஆதிராஜ், விவேக் பிரசன்னா, ரோஹித் நந்தகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஷபிக் முகமது அலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[அஜித் சம்பளம் 100 கோடியா?](https://minnambalam.com/k/2019/07/11/20)**
�,”