Yஅலுவலக வாடகை: பெங்களூரு முதலிடம்!

Published On:

| By Balaji

ஆசிய அளவில் அலுவலக வாடகையில் அதிகப் பயன்பெற்ற நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான *நைட் பிராங்க்* இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ’ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் அலுவலக வாடகை 7 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் இப்பட்டியலில் பெங்களூரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூருவைத் தொடர்ந்து 5.5 சதவிகித உயர்வுடன் ஜப்பானின் டோக்யோ நகரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் அலுவலக வாடகை உயர்வில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 2018ஆம் ஆண்டின் வரும் மாதங்களிலும் சிட்னி, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அலுவலக வாடகை அதிகமாகவே இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து *நைட் பிராங்க்* நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு ஆராய்ச்சித் தலைவரான நிகோல்ஸ் ஹோல்ட், *ப்ளூம்பெர்க்* ஊடகத்திடம் பேசுகையில், “முதன்மை அலுவலகங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் 2018ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியிலும் வாடகை உயர்வு அதிகமாக இருக்கும். வர்த்தகத்தில் நெருக்கடிகள், பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியில் மந்தம் உள்ளிட்ட காரணிகள் இருந்தாலும் முதல் தர அலுவலகங்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share