Yஃப்ளூ வேலை எதிர்கொள்ள புதிய கேம்!

public

சமுதாயத்தில் வாழ்வதற்குத் தகுதி இல்லை என்ற உணர்வை இளைஞர்களுக்குக் கொடுத்து, அவர்களே அவர்களது உயிரை எடுக்கத் தூண்டும் விளையாட்டான ஃப்ளூ வேல் கேமை எதிர்கொள்ள, வாழ்க்கையின் மதிப்பை உணர வைக்கும் புதிய கேமை கேரளாவைச் சேர்ந்த மாணவர்களும் போலீசாரும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

கேரள மாநிலம், கன்னூரில் உள்ள ஆம்பிஷியஸ் காலேஜ் ஆப் அட்வான்ஸ் ஸ்டெடிஸ் என்ற கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், சக்கரகல் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் பிஜு என்பவரின் கூட்டு முயற்சியால் இந்தப் புதிய கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பிஜு கூறுகையில், இந்தப் புதிய விளையாட்டு பத்து நாட்களில் பயனுக்கு வரும். இந்த விளையாட்டில் இளைஞர்கள் 10 நிலைகளை முடிக்க வேண்டும். முதல் நிலையில், போட்டியாளர் அவரது அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுக்க வேண்டும். இது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இணக்கத்தை உண்டுபண்ணுவதற்கான முயற்சியாகும். இரண்டாவது நிலையில், நாங்கள் பரிந்துரைக்கும் வெவ்வேறு 10 புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும். மூன்றாவது நிலையில், முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லத்துக்குச் சென்று பார்வையிட வேண்டும்.

நான்காவது நிலையில், போட்டியாளர் சுற்றுலா செல்ல ஊக்குவிக்கப்படுவார். ஐந்தாவது நிலையில், சேற்றில் விளையாட வேண்டும். ஆறாவது நிலையில், முதியோர்களுடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க வேண்டும். ஏழாவது நிலையில், கேன்சர் மையத்துக்குச் சென்று பார்வையிட வேண்டும். எட்டாவது நிலையில் பழைய ஆசிரியர்களைச் சந்தித்துப் பேச வேண்டும். ஒன்பதாவது நிலையில் போட்டியாளர் கடின உழைப்பால் ரூ. 1000 சம்பாதிக்க வேண்டும். இந்த ஒன்பது நிலைகளை முழுவதுமாக முடித்தவர்கள் மட்டுமே பத்தாவது நிலைக்குச் செல்ல முடியும்.

பத்தாவது நிலையில், போட்டியாளர் ஒரு மாதத்துக்குத் தங்கள் கல்லூரியில் தங்க வேண்டும். அப்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் தொலைபேசியைப் பயன்படுத்தலாம். நேர அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி போட்டியாளர்கள் சமைத்தல், சுத்தம் செய்தல், படித்தல், இசை கேட்டல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்ய வேண்டும்.

இதுவரை இந்த விளையாட்டை விளையாடுவதற்கு 20 பேர் முன்வந்துள்ளனர் என சப் இன்ஸ்பெக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருப்பது போல், ப்ளூ வேல் போன்ற எதிர்மறையான விளையாட்டிலிருந்து இளைஞர்களை மீட்க ஒரு நேர்மறையான விளையாட்டு உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *