Xசோலார் மின் உற்பத்தி அதிகரிப்பு!

public

2017ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியா 4,765 மெகா வாட் அளவிலான சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

மெர்காம் இந்தியா ரிசர்ச் நிறுவனம் இந்தியாவின் சோலார் மின் உற்பத்தி குறித்த விவரங்களைத் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதில், ‘2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியா 1,869 மெகா வாட் அளவிலான சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது. இதில் மேற்கூரை வாயிலான சோலார் மின் உற்பத்தி 230 மெகா வாட். மற்ற வகையிலான சோலார் மின் உற்பத்தி 1,639 மெகா வாட்.

2017ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 4,765 மெகா வாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் மேற்கூரை வாயிலான சோலார் மின் உற்பத்தி 475 மெகா வாட் ஆகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை விட 10 சதவிகிதம் கூடுதலாகும்.

பிற வகையிலான சோலார் மின் உற்பத்தி முதல் ஆறு மாதங்களில் 4,290 மெகா வாட். 2017 அரையாண்டின் முடிவில் ஒட்டுமொத்த மேற்கூரை சோலார் மின் உற்பத்தி அளவு ஒரு கிகா வாட்டைத் தாண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *