திரையுலகில் ஐம்பது படங்களைக் கடந்து நடித்து வரும் ஹன்சிகா தற்போது புதிய படத்தில் இணைந்துள்ளார்.
குழ்ந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துவரும் ஹன்சிகா தற்போது யு.ஆர்.ஜமீல் இயக்கும் மஹா திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். பல்வேறு தோற்றங்களில் அவர் நடிக்கும் இந்தப் படத்தில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் ஹன்சிகா மற்றொரு புதிய படத்தில் இன்று இணைந்துள்ளார்.
ஹன்சிகா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு பார்ட்னர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். இப்படத்தின் பணிகள் இன்று காலை பூஜையுடன் ஆரம்பமானது.
ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக பாலக் லல்வாணி நடிக்கிறார். ஹன்சிகா யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோரும் படக்குழுவில் இணைந்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். ஆர்.எஃப்.சி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘யு-டர்ன்’. சமந்தா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படத்தை பவன் குமார் இயக்கியிருந்தார்.
�,”