Xவைகோ பின்னணியில் பாஜகவா? தமிழிசை

public

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ்-மதிமுக இடையேயான மோதல் குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது உரையில் காங்கிரஸை மிகக் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ பேச்சில் உள்நோக்கம் இருப்பதாகவும், காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசையே விமர்சிக்கிற வைகோ அரசியல் நாகரீகமற்றவர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், “அமித் ஷா சொல்லி வைகோ பேசியிருக்கிறார் என்னும்போது அவர் மிகப்பெரிய துரோகி” என்று விமர்சித்தார். இதற்கு வைகோவும் சூடாக எதிர்வினையாற்றியிருந்தார். இது திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 9) செய்தியாளர்களை சந்தித்தபோது இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை, “வைகோவும் கே.எஸ்.அழகிரியும் சண்டை போட ஆரம்பித்துள்ளனர். மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்படும் வரை எதையுமே பேசாமல், தேர்வு செய்யப்பட்ட பிறகு காங்கிரஸைக் குறை கூறுகிறார் வைகோ. அவர் கூறுவதிலும் சில கருத்துகள் இருக்கின்றன. அழகிரி சொல்வதிலும் சில கருத்துகள் உள்ளன” என்றார்.

மேலும், “பொருந்தாதவர்கள் கூட்டணி அமைத்தார்கள். இன்று மறுபடியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று குறை சொல்வதை ஒப்புக்கொள்ள மாட்டேன். நேர்மறை அரசியலில்தான் பாஜகவுக்கு எப்போதும் விருப்பம்” என்றும் விளக்கம் அளித்தார்.

**

மேலும் படிக்க

**

**[கலைஞர் சிலை திறப்பு பொதுக்கூட்டம்: வருத்தத்தில் வைகோ](https://minnambalam.com/k/2019/08/09/6)**

**[வருகிறார் 90’ஸ் ரஜினி?](https://minnambalam.com/k/2019/08/08/21)**

**[மணிகண்டனை கண்டு கொள்ளாத ஓ.பன்னீர்](https://minnambalam.com/k/2019/08/09/23)**

**[டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை திட்டிய மணிகண்டனின் ஆடியோ ஆதாரம் – நீக்கம் பின்னணி!](https://minnambalam.com/k/2019/08/08/67)**

**[இனி நண்பர்களை ஏற்க முடியாது: லடாக் எம்.பி](https://minnambalam.com/k/2019/08/08/33)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *