குஜராத்தில் தன்டுக்கா பர்வாலா சாலையில் லாரியும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்ட எல்லைக்குட்பட்ட தன்டுக்கா பர்வாலா பிரதானச் சாலையில் இன்று( ஆகஸ்ட் 27) காலை வேகமாக வந்த ஜீப், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த்திசையில் வந்த லாரியின் மீது மோதியது. இதில், 5 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்த ஒருவர் மட்டும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து, உயிரிழந்த 11 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசாரி கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர். இதுகுறித்து முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.�,