xவாஜ்பாயிடம் பிரதமர், ராகுல் நலம் விசாரிப்பு!

public

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று (ஜூன் 11) டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இது வழக்கமாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனைதான் என்றும், வாஜ்பாய் நலமுடன் உள்ளார்; பரிசோதனை முடிந்த பிறகு அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ளதால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாஜ்பாய்க்கு நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநருமான ரன்தீப் குலேரியா மேற்பார்வையில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குலேரியா கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வாஜ்பாய்க்குத் தனிப்பட்ட மருத்துவராக இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை, பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு சந்தித்து நலம் விசாரித்தார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

முன்னதாக நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0