Xவருமான வரி சோதனை: பொன்.ராதா பதில்!

Published On:

| By Balaji

துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வருமான வரித் துறையினரை பயன்படுத்தி மோடி அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த முயல்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்வார்கள். அதைத் தடுத்தால் தேர்தல் தோல்வி பயம் என்று கூறுவார்கள். ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் ஈடுபட்டால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. பணப்பட்டுவாடா பல இடங்களிலும் நடைபெறுகிறது. அதை தடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு, இலவச பொருட்கள் கொடுக்கப்படுகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share