மொபைல் போன் பாகங்கள் தயாரிப்புத் துறையின் மதிப்பானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2 பில்லியன் டாலரை எட்டுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் மொபைல் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவிலேயே மொபைல் போன்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் இந்தியாவில் மொபைல் போன் பாகங்கள் தயாரிக்கும் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்திய மொபைல் போன் பாகங்கள் தயாரிப்புச் சந்தையின் மதிப்பு 2 பில்லியன் டாலரை எட்டுமென்று *இந்திய செல்லுலர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன்* தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரோ கூறியுள்ளார்.
இதுகுறித்து நவம்பர் 21ஆம் தேதி அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் மொபைல் போன் பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்து 268 ஆக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 1,800 ஆகவும், இதன்மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாகவும் அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மொபைல் போன் பாகங்கள், பிசிபி அசெம்பிளிங் உள்ளிட்ட பிரிவுகளின் முதலீடுகள் 2 பில்லியன் டாலர் (ரூ.10,500 கோடி முதல் 14,000 கோடி) வரை உயரும். தற்போது இத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 6.7 லட்சமாக உயர்ந்துள்ளது. 2017-18ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4.5 லட்சமாக மட்டுமே இருந்தது” என்றார்.�,”