Xமாம்பழ விளைச்சல் சரியும் அபாயம்!

Published On:

| By Balaji

வானிலை மாறுபட்டு வருவதால் மாம்பூக்கள் பூஞ்சைத் தாக்குதலுக்கு இரையாகி நடப்பாண்டில் மாம்பழம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மாம்பழம் விளையக் குளிர் காலம் அவசியமானது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான வானிலையால் மழையும், பூச்சி மற்றும் பூஞ்சைத் தாக்குதலும் இந்தாண்டு மாம்பழ உற்பத்தியை வெகுவாக குறைத்து விடும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது எனக் கோவா விவசாயத் துறை இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாத இறுதியிலும் நவம்பர் மாதத் தொடக்கத்திலும் உள்ள பனிக்காலம் மாம்பழம் விளைச்சலுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் வானிலை மழையுடனும், மேகமூட்டத்துடனும் காணப்படுவதால் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. மாமரத்தில் பூப்பூக்க பனிக்காலம்தான் சிறந்தது. தற்போது பருவகாலம் மாற்றம் அடைந்து மழை தொடர்ச்சியாகப் பெய்வதால் அதன் பூ விடும் காலம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. மேலும் மழையால் பூக்கள் பூஞ்சைத் தாக்குதலுக்கு இரையாகும். இதனால் மாம்பழ விளைச்சல் பருவம் மாறுபடும். இப்படி விளைச்சல் பருவம் மாறுபடுவதால் உற்பத்தியும், வருமானமும் குறைந்து பாதிப்பை ஏற்படுத்துமென விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share