இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிய பெண் ஒருவர் தனது இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அரசு வேலையை நிரந்தரமாக்கிக்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்த மேகலை என்பவர் 2005இல் ஆசிரியராக சேர்ந்தார். இவரது பதவி நிரந்தரமாக்கப்படாமலிருந்தது. இவர் முன்னதாக கிருஸ்துவ மதத்தில் இருந்தாலும் அவருடைய சான்றிதழில் கிருஸ்துவ ஆதி திராவிடர் என்று பதிவாகியிருந்தது. பின்னர் இந்து மதத்திற்கு மாறி,ஆதி திராவிடருக்கான இடஒதுக்கீட்டை பயன்படுத்தி 2005இல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவரது பணியை நிரந்தரமாக்குவதற்கு அரசு மறுத்து வந்தது. இவர் முறையான இந்து மத அமைப்புகளிடம் இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் பெறவில்லை, அதற்கான சடங்குகளும் செய்யவில்லை என்று அரசு மறுப்பதற்கான காரணம் கூறியிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேகலை வழக்கு தொடர்ந்தார்.
வழக்கினை பரிசீலித்த நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் ஒரு முறையான அங்கீகாரம் பெற்ற இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்புதான் முறைப்படி மேகலைக்கு மதமாற்றச் சடங்கு செய்து வைத்துள்ளது. எனவே அவர் ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டை பயன்படுத்தி அரசு வேலையை நிரந்தரமாக்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
�,