10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்தும் வகையில், அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது. அதில், தேர்வுகள் தொடங்கும் நாள், முடிவடையும் நாள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் என அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன,
அதன்படி 10 ஆம் வகுப்புத் தேர்வுகள், 2019 மார்ச் 17 முதல், ஏப்ரல் 9ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 4 ஆம் முதல் 26ஆம் தேதி வரையிலும், நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதே போல், 12ஆம் வகுப்புத் தேர்வுகள், மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், 11 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள், 2019 ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே 4ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் பாடவாரியான தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து மாணவர்கள் [இந்த](https://drive.google.com/file/d/1cB8wI73qDUsUOonPM8GaHbb8U2aMawIA/view?_ga=2.29254779.674689771.1563189920-30607170.1561615801) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
**
மேலும் படிக்க
**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”