xபாமாயில் இறக்குமதி: வரி உயர்வுக்கு வரவேற்பு!

public

^

பாமாயில் இறக்குமதி மீதான வரியை உயர்த்தியதற்கு பாமாயில் மேம்பாடு மற்றும் தொழில் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

பாமாயில் இறக்குமதியில் இதற்கு முன்னர் 7.5 சதவிகித வரி விதிக்கப்பட்டுவந்தது. அதை 15 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோல, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 15 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதுபற்றி பாமாயில் தொழில் கூட்டமைப்பின் தலைவரான சஞ்சய் கோயன்கா, “கச்சா பாமாயில் அளவு அதிகரித்துள்ளதால் விவசாயிகளிடத்தில் மட்டும் ரூ.40 கோடி முதல் ரூ.60 கோடி வரையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்துறை தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இறக்குமதியைக் குறைத்து உளநட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு இந்த இறக்குமதி வரி உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *