xபாட்டில் மூடி சேலஞ்ச் செய்த மத்திய அமைச்சர்!

Published On:

| By Balaji

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாட்டில் மூடி சவாலைச் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கீகி சேலஞ்ச் வைரலானது. ஓடும் காரில் இருந்து இறங்கி ஏதாவதொரு பாடலை பாடி நடனம் ஆட வேண்டும். இளைஞர்கள் மத்தியில் இதுபோன்ற சவாலான செயல்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது #Bottlecapchallenge டிரண்டாகியுள்ளது.

தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க, கால்களால் உதைத்து, மூடியை மட்டும் தனியாக பறக்க வைப்பதுதான் இந்த சேலஞ்ச். இதை முதன்முறையாக கஜகஸ்தானைச் சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்புக் கலை வீரர் பராபி டாவ்லட்சின் செய்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இதை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சவாலை, ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை ஒயிட்னி கம்மிங்ஸ், பாலிவுட் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர் தோனி உட்பட செய்து, வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் இந்த சவாலை செய்து வீடியோ ஒன்றை தனது [இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்]( https://www.instagram.com/p/BzuU3C3hVfx/?igshid=12ses8aaem87e). மேலும், “போதை பழக்கத்திலிருந்து தள்ளியிருங்கள். ஃபிட் இந்தியா பிரச்சாரத்துக்குத் தயாராகுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள அவர், “பாட்டில் மூடியை திறப்பது அறுவை சிகிச்சை போன்று மிகத் துல்லியமானது. இதற்கு அதிக கவனம், உடல் வலிமை தேவை. உங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தோடு இருக்க விரும்பினால், வலிமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். உடல் வலிமை உங்கள் தோற்றத்தில் இல்லை, அது உங்கள் ஒழுக்கத்தில் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share