பாகுபலி நாயகனுடன் கைகோக்கிறார் ஷ்ரத்தா கபூர். பாகுபலி படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் ஷாஷி . தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய மொழிப் படங்களில் ஷ்ரத்தா கபூர் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
அமிதாப் பச்சன் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான டீன் பாட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷ்ரத்தா கபூர். மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘ஓகே ஜானு’ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
பாகுபலி படம் இந்தியில் வெளியானதைத் தொடர்ந்து பாலிவுட் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் பிரபாஸ். எனவே இந்தப் படத்தை மொழிமாற்றம் செய்யால் இந்தியிலேயே படமாக்கப் படக் குழு முடிவு செய்துள்ளது. அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் டை ஹார்ட், ட்ரன்ஸ்பார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டை இயக்குனரான கென்னி பேட்ஸ் பணியாற்றுகிறார். ஷங்கர்- இசான் – லாய் இசையமைக்க உள்ளனர்.�,