Xபதவி கொடுத்தால் எடப்பாடி பக்கம்!

public

தினகரனுக்கு ஆதரவு அளிப்பவர்களில் 3 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் 19 எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்து விடுவார்கள் என்று எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று(ஆகஸ்ட் 24) அதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா நீக்கப்பட்டதாக, அம்மா அணி துணைப்பொதுச் செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிவிப்பு செல்லாது என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறுகையில், அதிமுக இயக்கமும், அரசும் சிறப்பாக செயல்படுவதற்கு மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகளும், மதுரை வடக்கு தொகுதி நிர்வாகிகளும் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தீர்மானமும் நிறைவேற்றினர். கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சிப்பணியையும், ஆட்சிப்பணியையும் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். அவருக்கு மதுரை புறநகர் மாவட்ட சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஜாமீனில் வெளிவந்தபோது அவரை சந்தித்த எம்.எல்.ஏ.க்களில் நானும் ஒருவன். தற்போது அவருக்கும், இந்த இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் காரணமாகவே கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் அவரைப்பற்றி எதுவும் பேசுவதில்லை. தினகரன் பொதுவாக நற்குணம் படைத்தவர். ஈகை குணம் படைத்தவர். அம்மாவிடம் உதவியாளராக இருந்தவர்.

கட்சியை விட்டு விலக்குவதிலும், மீண்டும் சேர்ப்பதிலும் எனக்கு பல படிப்பினைகள் உண்டு. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்னை பலமுறை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். பின்னர் சேர்த்திருக்கின்றனர். இப்படி ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவன் நான். தற்போது தினகரன் என்னை நீக்குவதில் அவசரப்பட்டு விட்டார். உணர்ச்சி வசப்பட்டு விட்டார்.

ஆட்சியும், கட்சியும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஓ. பன்னீர் செல்வம் அணி இணைந்ததை வரவேற்கிறோம்.

கடந்த காலங்களில் இரு தரப்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எதிரும், புதிருமாக சந்தித்தோம். அத்தனையையும் தற்போது மறந்து அம்மா ஆட்சியும், கட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக அமைதி காத்து வருகிறோம்.

இந்த நேரத்தில் என்னை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுச் செயலாளர் சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்னை நீக்க சசிகலா எப்போது ஒத்துழைப்பு கொடுத்தார்? கடிதம் வாயிலாகவா? போனில் தெரிவித்தாரா? அவர் சிறையில் உள்ளார். தினகரன் அவரை நேரில் சந்தித்தாரா? எந்த வகையில் ஒப்புதல் கொடுத்தார்? ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட என்னை போன்றவர்களை நீக்க சசிகலா ஒப்புதல் கொடுக்க வாய்ப்பில்லை.

துணைப்பொதுச் செயலாளர் அங்கீகாரத்தை அதிமுக பொதுக்குழு தினகரனுக்கு இதுவரை கொடுக்கவில்லை. எனவே தினகரனின் அறிவிப்பை பொருட்படுத்த தேவையில்லை. தொடர்ந்து பணியாற்றுவோம். அதிமுக இயக்கத்தை வலுப்படுத்துவோம். அதற்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

தற்போது தினகரனை ஆதரிக்கிறோம் எனக்கூறும் 19 எம்.எல்.ஏ.க்களை பொறுத்தவரை, 3 பேருக்கு அமைச்சர் பதவி என்று கூறிவிட்டால் 19 பேரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் ஓடிவிடுவார்கள். அதிமுக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *