xபட்டாசு தொழிற்சாலையில் தீ: 11 பேர் உயிரிழப்பு!
தெலங்கானாவில், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (ஜூலை 4) ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத்தில் உள்ள காசிபக்காவில் ஸ்ரீ பத்ரகாளி பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், தொழிற்சாலைக்குள் இருந்த 15 பேரில் பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.மேலும், 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்டைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் கோலபள்ளி ராஞ்குமார் கூறுகையில் “இந்த தொழிற்சாலையில் ஏழு அல்லது எட்டு பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு அவர்களுக்கு 200 ரூபாய் தருகிறேன், இங்கு வேலை பார்ப்பதற்கு நிறைய ஆட்கள் தினந்தோறும் வந்தாலும், அவர்களுக்கு நான் வேலைத் தருவதில்லை. இன்றைக்கு ஆலையில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை” என்றார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “இந்தத் தொழிற்சாலையில் இன்று 21பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து குறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.�,