நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்படும் அகில இந்திய கலந்தாய்வுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, சிபிஎஸ்இ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த நீட் தேர்வில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் நடந்ததாக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்காக நடத்தப்படும் அகில இந்திய கலந்தாய்வுக்கு இடைக்கால தடைவிதிப்பதாக உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்துத் தீர்ப்பு வழங்கவும் சிபிஎஸ்இ கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை நாளை (ஜூலை 31) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.�,