சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தீவிரவாதி என்றால் ஆங்கிலத்தில் extremist, பயங்கரவாதி என்றால் terrorist, இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்ற திருமாவளவன், ”நான் சொல்லுகிறேன் காந்தியடிகளே ஒரு இந்து தீவிரவாதிதான். காந்தியடிகளைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு இந்து பயங்கரவாதி. இதை நான் சொல்வது இந்து மதத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் அல்ல” என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த சூழலில் இந்து மக்கள் முன்னணி தலைவர் வி. ஜே நாராயணன் அசோக் நகர் காவல் நிலையத்தில் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இரு பிரிவினரிடையே அமைதியைச் சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவரது பெயர் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு எதிராக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. கமலின் பேச்சை குறிப்பிட்டு பேசும் போதுதான் திருமாவளவன் இவ்வாறு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/06/15/67)**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
�,”