Xதகவல் மையங்களை ஈர்க்கும் சென்னை!

Published On:

| By Balaji

கடலோர நகரமாக இருப்பதால் சென்னை அதிகளவில் தகவல் மையங்களை ஈர்த்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தகவல்களை இந்தியாவில் சேமித்து வைத்துவரும் சூழலில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆசிய பசிபிக் மண்டலத்தின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் மையச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் எனவும், இந்தியாவின் சந்தை 2.2 பில்லியன் டாலரிலிருந்து (2016) இருமடங்கு உயர்ந்து 4.5 பில்லியன் டாலராகும் என்றும் சொத்து ஆலோசனை நிறுவனமான சி.பி.ஆர்.இ தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே தகவல் மையங்களை வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ள நிலையில் இந்த வளர்ச்சி சாத்தியம் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமேசான் நிறுவனம் தனது இந்தியத் தொழில் குறித்த விவரங்களை இந்தியாவிலேயே சேமித்து வைத்துள்ளது. மாஸ்டர் கார்டு நிறுவனமும் புதிய பரிவர்த்தனை விதிமுறைகளை உள்ளூர் விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியுள்ளது. தற்போது நாட்டிலேயே மும்பையில்தான் அதிக எண்ணிக்கையில் (35) தகவல் மையங்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் பெங்களூருவில் 27 மையங்களும், டெல்லியில் 19 மையங்களும் உள்ளன. மும்பையும், சென்னையும் கடலோர நகரங்களாக இருப்பதால் தகவல் மைய நிறுவனங்களை அதிகளவில் ஈர்த்துள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share