Xஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு!

public

சான்றிதழ் சரிபார்ப்பைத் தொடர்ந்து ஜூலை முதல் வாரத்தில் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி வரை ரேண்டம் எண் வழங்கப்பட்டது. அத்துடன் விண்ணப்பித்த மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த ஏழு நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, உதவி மையத்தில் நேற்று (ஜூன் 17) வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு நேற்று காலை முதலே மாணவர்கள் வரத் தொடங்கினா். மாலை 5.30 மணி வரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது.

எனினும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது ஒரு சில சான்றிதழ்களைக் கொண்டு வராத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கலந்தாய்வு விசாரணை மையத்தில் விடுபட்ட சான்றிதழ்களை ஓரிரு நாட்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியுள்ளார்.

இதையடுத்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு ஜூலை 6 முதல் கலந்தாய்வு தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *