விளக்குகள், பரிசுப் பொருட்கள் போன்ற சீனப் பொருள்களின் விற்பனை இந்த ஆண்டு தீபாவளி காலத்தில் 40 முதல் 45 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்தியர்கள் உள்நாட்டு தயாரிப்புகளை விரும்புவதே இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதுகுறித்து அசோசெம் சமூக மேம்பாட்டு அமைப்பு மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள் ஆகியோரிடம் அகமதாபாத், போபால், சென்னை, டேராடூன், டெல்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளி காலத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சீனப் பொருட்களின் தேவை 40 முதல் 45 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. சீனப் பொருட்களை பொறுத்தவரையில் அலங்கார விளக்குகள், விநாயகர் மற்றும் லட்சுமி சிலைகள், ரங்கோலிகள், பட்டாசுகள் போன்றவையே அதிகமாக விற்பனையாகியுள்ளன.
அதேபோல எல்.சி.டி. தொலைக்காட்சி, செல்போன்கள் போன்ற சீன மின்னணு தயாரிப்புப் பொருட்களின் தேவையும் 15 முதல் 20 சதவிகிதம் சரிந்துள்ளது. பெரும்பாலான இந்திய வாடிக்கையாளர்கள் உள்நாட்டுப் பொருட்களையே விரும்புவதாகக் கூறுகின்றனர். 2016ஆம் ஆண்டு தீபாவளி காலத்தில் ரூ.6,500 கோடிக்கு சீனப் பொருட்கள் விற்பனையானது. அதில் அலங்கார விளக்குகள், பொம்மைகள், பரிசுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றின் மதிப்பு மட்டும் ரூ.4,000 கோடியாகும்” என்று கூறப்பட்டுள்ளது.�,”