இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரில் 30ஆவது கோடைக்கால பல்கலைக்கழகப் போட்டிகள் (Summer University Games) நடைபெற்று வருகின்றன. சர்வதேசப் போட்டியான இதில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையான 11.32 விநாடிகளைத் தன்வசம் வைத்துள்ள டுட்டி சந்த், இந்தப் போட்டியில் 100 மீட்டரை 11.24 விநாடியில் கடந்து தங்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுனிவர்சிட்டி போட்டியில் தங்கம் வெல்வது முதன்முறை ஆகும்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அஜ்லா டெல் போன்ட்டே 11.33 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தான், ஓர் பாலின உறவு கொள்பவர் என்பதை வெளிப்படையாக அறிவித்த ஒரே இந்திய வீராங்கனை டுட்டி சந்த் மட்டுமே. இதற்காகக் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார். இந்த வெற்றிக்குப் பின்பு ‘என்னைக் கீழே தள்ளினால் மீண்டும் எழுவேன்’ என ட்விட் செய்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[ராஜ்யசபா தேர்தல் நடக்காது!](https://minnambalam.com/k/2019/07/10/51)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[பதவி விலகத் தயார்: அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/10/54)**
**[இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!](https://minnambalam.com/k/2019/07/09/22)**
�,”