Xசர்வதேசத் தேயிலை உற்பத்தி சரிவு!

public

நடப்பாண்டில் சர்வதேச (கருப்பு) தேயிலை உற்பத்தி 1.21 சதவிகிதம் சரிந்துள்ளது.

சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் நாடுகள் வெளியிட்டுள்ள உற்பத்தி விவரங்களின்படி, ஜனவரி முதல் இதுவரையிலான காலகட்டத்தில் 1,846.04 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த உற்பத்தி அளவானது 2016ஆம் ஆண்டின் இதே கால அளவு வரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த 1,823.69 மில்லியன் கிலோ தேயிலையை விட 1.21 சதவிகிதம் குறைவாகும். அதாவது அளவு அடிப்படையில் 22.35 மில்லியன் கிலோ குறைவான அளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியில் அதிக சரிவைச் சந்தித்த நாடாகக் கென்யா உள்ளது. இந்நாடு முந்தைய ஆண்டைவிட 41.03 மில்லியன் கிலோ குறைவான அளவில் மொத்தம் 346.97 மில்லியன் கிலோ தேயிலையை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.

கென்யாவைத் தொடர்ந்து உகாண்டா 8.24 மில்லியன் கிலோ குறைவாக மொத்தம் 23.75 மில்லியன் கிலோ தேயிலையையும், தன்சானியா 2.10 மில்லியன் கிலோ குறைவான அளவில் 18.27 மில்லியன் கிலோ தேயிலையையும் உற்பத்தி செய்துள்ளது. ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக வங்கதேசம் 8.81 மில்லியன் கிலோ குறைவான அளவில் தேயிலையை உற்பத்தி செய்திருக்கிறது. இதன் மொத்த உற்பத்தி 51.86 மில்லியன் கிலோ. உற்பத்தியில் அதிக ஏற்றத்தைச் சந்தித்த நாடாக இலங்கை உள்ளது. இந்நாடு முந்தைய ஆண்டைவிட 21.48 மில்லியன் கிலோ கூடுதலான அளவில் மொத்தம் 256.70 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாகத் தேயிலை உற்பத்தியில் இந்தியா வழக்கம்போலவே முன்னிலை வகிக்கிறது. இதுவரையில் இந்தியா மொத்தம் 1,089.87 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 15.45 மில்லியன் கிலோ உயர்வாகும். இந்தியாவின் உள்நாட்டுத் தேயிலை உற்பத்தியை எடுத்துக்கொண்டால், வடஇந்தியாவில் 2.32 மில்லியன் கிலோ குறைவான அளவில் (894.23 மில்லியன் கிலோ) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் தென்னிந்தியாவில் தேயிலை உற்பத்தி 17.77 மில்லியன் கிலோ கூடுதலான அளவில் மொத்தம் 195.64 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0